கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 129 பயணிகள், 8 விமான ஊழியர்கள், 137 பேருடன் விமானம் சென்னை வந்து கொண்டிருந்தபோது இ-மெயில் மிரட்டல் வந்துள்ளது. காலை 10.40 மணிக்கு விமானம் தரையிறங்கியதும், அதில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டுகள் வெடிக்கும் என இ-மெயிலில் கூறப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கியது அதில் ஏறி வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் விமாணத்தில் இல்லாததால், மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
Advertisement
Advertisement