கருப்பு சட்டையில் வந்த ‘அன்புமணி’ எம்எல்ஏக்கள்
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், பங்கேற்க வந்த அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சட்டப்பேரவை பாமக குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்டும். எம்எல்ஏ அருளின் கொறடா பதவியை பறிக்க வேண்டும். தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனை, பேரவை பாமக குழு தலைவராகவும், மயிலம் எம்எல்ஏ சிவகுமாரை கொறடாவாகவும் நியமிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இந்நிலையில், பாமக சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கொறடாவை மாற்றக் கோரிய கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுப்பதாக கூறி அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ.க்கள் 3 பேர் நேற்று கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement