தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு

Advertisement

ஐதராபாத்: ெதலங்கானாவின் பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் ஜூப்லி ஹில்ஸில் ஏற்பாடு செய்யப்பட்ட காமெடி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஜூப்லி ஹில்ஸில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலில் நகைச்சுவை நடிகர் டேனியல் பெர்னாண்டஸின் ‘ஸ்டாண்ட்-அப்’ கமெடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்றும், மீறி நிகழ்ச்சிக்கு சென்றால் அடிப்பேன் என்று பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் மிரட்டல் வீடியோ வெளியிட்டார்.

மேலும் அந்த வீடியோவில், ‘ஜெயின் சமூக மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக, கடந்த சில தினங்களுக்கு முன் டேனியல் பெர்னாண்டஸ் வீடியோ வெளியிட்டார். எனவே டேனியல் பெர்னாண்டஸ் தனது ‘ஸ்டாண்ட்-அப்’ கமெடி நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் அல்லது எங்களது கட்சியினரின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும்’ என்று கூறினார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அந்த ஓட்டலுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘அந்த ஓட்டலில் தனியார் அமைப்பாளரால் ‘ஸ்டாண்ட்-அப்’ கமெடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து அவர்கள் எங்களிடம் முன்பே தெரிவிக்கவில்லை. முன்அனுமதி பெறாததால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது’ என்றார். ஏற்கனவே கடந்த 2022 ஆகஸ்ட்டில் மற்றொரு ஸ்டாண்ட்-அப் நடிகர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ராஜா சிங் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News