பாஜ, வலுவில்லாத கூட்டணியா? வானதி சீனிவாசன் பதில்
கோவை: கோவையில் பாஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணியா? அல்லது வலுவில்லாத கூட்டணியா? என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்துவிடும். நம்பரின் எண்ணிக்கை வைத்து பார்த்தாலும், நாங்கள் தான் பலமாக இருக்கிறோம். அதனால் நாங்கள் வலுவிலக்கவில்லை. தேமுதிக, பாமக தவெக கூட்டணி செல்வதாக அவர்கள் கூறவில்லை. யார்? யாரை, எப்படி? பார்க்க வேண்டும் என்பதை டெல்லி தலைமை பார்ப்பார்கள். ஒரு மாதம் பொறுங்கள் இதை விட பிரமாண்டமான கூட்டணி நாங்கள் கொண்டு வருவோம். ரோடு ஷோவுக்கு என்ன கட்டுப்பாடுகள் உள்ளதோ? அதை விஜய் பின்பற்ற வேண்டும். நான் எந்த தொகுதி? நான் வேட்பாளரா? இல்லையா? என்பதை தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும். கட்சி முடிவெடுப்பதை நான் பின்பற்றுவேன். கட்சி என்ன கூறுகிறதோ?, அதைக் கேட்பேன்’ என்றார்.