பாஜ தேசிய தலைவராகிறாரா? ஒன்றிய அமைச்சர் சிவ்ராஜ் சவுகான் இல்லத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
போபால்: மத்தியபிரதேச மாநிலம் முதல்வராக நான்கு முறை பதவி வகித்த சிவ்ராஜ் சிங் சவுகான், தற்போது ஒன்றிய விவசாய அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது போபால் இல்லத்துக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
வீட்டின் பிரதான வாயிலுக்கு முன் காவல்துறையினருக்கான தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு, இணைப்பு சாலைகளில் பல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் காவல்துறையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். சிவ்ராஜ் சிங் சவுகான் இல்லத்துக்கு திடீரென பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்து, அவர் விரைவில் பாஜ தேசிய தலைவராக நியமிக்கப்படலாம் என்ற ஊகங்களை எழுப்பி உள்ளது.
Advertisement