பா.ஜ.க.வினர் சிறையில் அடைப்பு
Advertisement
திருவள்ளூர்: தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த காரில் வந்த திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க.வினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே காரை தடுத்து நிறுத்தி 5 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரையும் ஏப்.2 வரை காவலில் வைக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட புகாரில் மேலும் ஒரு பாஜக நிர்வாகி சோமசுந்தரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Advertisement