பாஜவினரின் அறிவு செயல்பாடு அபாரம்: மார்க்சிஸ்ட் எம்பி கிண்டல்
மதுரை: `விண்வெளிக்கு முதலில் சென்றவர் அனுமன்’ என்று பாஜ ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்த கருத்துக்கு, ‘பாஜவினரின் அறிவு செயல்பாடு அபாரம் என மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கிண்டல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போது, அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனார் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விஷயமல்ல. பாஜவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது. நீல் ஆம்ஸ்ட்ராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்’’ என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement