பாஜவுக்கு வாக்களித்தால் கேரளா அழிவுப்பாதைக்கு சென்று விடும்: பினராயி விஜயன் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரள மின்வாரிய அதிகாரிகளின் மாநில மாநாட்டில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பேசியது: கேரளாவில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜ ஆட்சியைப் பிடிக்கும் என்றுஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
Advertisement
பாஜ ஆட்சிக்கு வந்தால் கேரளா அழிவுப்பாதையை நோக்கி சென்றுவிடும். பாஜவுக்கு பெரும்பான்மை கிடைத்தால் நாம் இவ்வளவு காலம் அனுபவித்து வந்த மத சுதந்திரம் பறிபோய்விடும். மதசார்பின்மைக்கும், ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். கேரள மக்கள் தங்களது உணவு, ஆடை சுதந்திரத்தை இழக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement