அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர்தான்... அமித்ஷாவை பார்த்து பயமா? எனக்கா? குஜராத் காந்திநகர் தொகுதி காங். வேட்பாளர் சரவெடி
Advertisement
அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக கட்டிட கலைஞரான சோனால் படேல்(62) போட்டியிடுகிறார். காங்கிரஸ் கமிட்டி செயலாளரான சோனால் படேல் மும்பை மற்றும் மேற்கு மகாராஷ்டிராவின் காங்கிரஸ் இணைப்பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சோனால் படேல் பேட்டி அளித்தார். அப்போது, “குஜராத் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறி விட்டதால் ஆட்சிக்கு எதிரான போக்கு நிலவுகிறது. அமித் ஷா ஒன்றிய உள்துறை அமைச்சராக இருக்கலாம். ஆனால் அவரும் ஒரு சாதாரண பாஜ ஊழியர். அவரை எதிர்த்து போட்டியிட எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்று கூறினார்.
Advertisement