தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பேச வேண்டாம் என நட்சத்திர பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள் : பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு உத்தரவு!!

Advertisement

டெல்லி : நட்சத்திர பேச்சாளர்கள் மேடை நாகரிகத்தை கடைபிடிக்க அறிவுறுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி மீதான வெறுப்பு பேச்சு புகாரில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம். மக்களவைத் தேர்தல் பரப்புரை தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில்,"தேர்தல் பரப்புரையின்போது காங்கிரஸ், பாஜக பேச்சாளர்கள் கண்ணியமாக பேச வேண்டும். பரப்புரையின்போது ஜாதி, சமுதாயம், மொழி, மதரீதியான பேச்சுகளை காங்., பாஜக பேச்சாளர்கள் தவிர்க்க வேண்டும். சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தும் வகையில் காங்., பாஜக பேச்சாளர்கள் பேசக்கூடாது.

இந்திய அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டு விடும் என்பது போன்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். ஆட்சி அதிகாரத்தில் உள்ள பாஜக கூடுதல் கவனத்துடன் பேச உத்தரவிடப்படுகிறது. ராணுவத்தில் அரசியலை கலக்கும் வகையில் அக்னிவீர் திட்டத்தை விமர்சிக்க கூடாது. பாதுகாப்புப் படையில் பிளவு ஏற்படும் வகையில் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்து பேசக் கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை காங்கிரஸ் கட்சி முறையாக கடைபிடிக்க வேண்டும். மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பாஜக நாட்டின் சமூக கட்டமைப்பு , தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது,"இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement

Related News