பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும்: கருத்துக்கணிப்பில் தகவல்
டெல்லி: பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. இதில், முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் வரலாறு காணாத வகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானது. பீகாரின் அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சியை தீர்மானிக்கும் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இன்றைய இறுதிக்கட்ட தேர்தலில், மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், சீதாமர்ஹி, மதுபானி, கயா, பாகல்பூர், பூர்ணியா உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
பீகார் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்ததால் மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜே.டி.யூ. - பாஜக கூட்டணி 135-140, ஆர்.ஜே.டி.- காங். கூட்டணி 100-115 இடங்களை பிடிக்கும் என டைம்ஸ் நவ் கணிப்பு
ஜே.டி.யூ.- பாஜக கூட்டணி 147-167, ஆர்.ஜே.டி. - காங். கூட்டணி 70-90, மற்றவை 2-6 இடங்களை பிடிக்கும் - மேட்ரிஸ்
என்.டி.ஏ. கூட்டணி 133-159, இந்தியா கூட்டணி 87-102, சன் சுராஜ் 0-2, மற்றவை 3-6: பீப்பிள் பல்ஸ்
என்.டி.ஏ. கூட்டணி 133-148, இந்தியா கூட்டணி 87-102, சன் சுராஜ் 0-2, மற்றவை 3-6: பீப்பிள் இன்சைட்
என்.டி.ஏ. கூட்டணி 135-150, இந்தியா கூட்டணி 88-103, சன் சுராஜ் 0-1, மற்றவை 3-6: JVC'S POLL
என்.டி.ஏ. கூட்டணி 145-160, இந்தியா கூட்டணி 73-91, மற்றவை 5-10: டைனிக் பாஸ்கர்.
இந்தக் கருத்துக் கணிப்புகள், வாக்காளர்களின் மனநிலையை ஓரளவு பிரதிபலிக்கும் என்றாலும், இவை இறுதியான முடிவுகள் அல்ல. பீகாரில் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதை, வரும் 14ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளே அதிகாரப்பூர்வமாகத் தீர்மானிக்கும்.