பாஜக நிர்வாகி ஜாமின் வழக்கு - ஐகோர்ட் உத்தரவு
12:27 PM Aug 09, 2025 IST
சென்னை : பாஜக மாநில செயலாளர் சிபி சக்கரவர்த்தி மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில், புகார் தாரரின் ஆட்சேபங்களை கேட்ட பிறகே ஜாமின் மனு மீது முடிவெடுக்க வேண்டும் என சேலம் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நில தகராறில் எஸ்டேட் காவலாளியை சாதிப் பெயரை வைத்து திட்டி, தாக்கியதாக ஏற்காடு போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.