பாஜகவின் கையில் அதிமுக சிக்கியுள்ளது -அன்வர் ராஜா பரபரப்பு பேட்டி
Advertisement
சென்னை: அதிமுகவை சீரழிப்பதற்குதான் பாஜக கூட்டணி சேர்ந்துள்ளது என திமுகவில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். பாஜக கையில் சிக்கியுள்ளது அதிமுக. 3 முறை பேட்டி அளித்த அமித் ஷா ஒரு இடத்தில் கூட முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி என்று கூறவில்லை. நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை எடப்பாடியால் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று நேற்றுதான் பழனிசாமி கூறியுள்ளார். பாஜக என்பது ஒரு எதிர்மறையான சக்தி; மக்கள் அதை ஏற்கமாட்டார்கள். என் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் சொல்லிப்பார்த்தேன், அவர்கள் கேட்கவே இல்லை. தமிழ்நாட்டில் ஸ்டாலின் அவருக்கு இணையான தலைவர் யாருமில்லை என்றும் கூறினார்.
Advertisement