நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜகவில் 387 எம்.பி., எம்எல்ஏக்கள் வாரிசு உறுப்பினர்கள் : ஆய்வறிக்கை வெளியீடு
டெல்லி : நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜகவில் 387 எம்.பி., எம்எல்ஏக்கள் வாரிசு உறுப்பினர்களாக பதவியில் உள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் வாரிசு எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த ஆய்வை ஆங்கில பத்திரிக்கை நடத்தியது. இதில் பா.ஜ.க., கூட்டணி கட்சியான தெலுங்குதேசம் கட்சியில் மட்டும் 51 பேர் வாரிசு உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 28 பேர் வாரிசுகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற மாநில கட்சிகளில் 30 பேருக்கும் குறைவாக மட்டுமே வாரிசு உறுப்பினர்கள் உள்ளனர்.
ஒன்றிய அமைச்சரவையில் வாரிசுகள் 6 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் இணை அமைச்சர்களாகவும் உள்ளனர். அதிகபட்சமாக பா.ஜ.க.,வில் 84 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு பதவியில் உள்ளனர். நாடு முழுவதும் 5,294 பேர் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். அதில் 1,174 பேர் வாரிசுகள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் 854 பேர் எம்.எல்.ஏகள், 80 பேர் மேலவை உறுப்பினர்கள்,58 பேர் மாநிலங்களவை உறுப்பினர்கள், 182 பேர் மக்களவை உறுப்பினர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.