தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய்க்கு பாஜ அழைப்பா..? நயினார் பதில்

நெல்லை, ஜூலை 17: நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்துவது குறித்த சுற்றுப்பயணத்தை பாஜ நிர்வாகிகள் சமீபத்தில் மேற்கொண்டனர். ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் எவ்வாறு நடந்துள்ளது, அதை மேம்படுத்துவது குறித்த விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நெல்லை மாவட்ட பாஜ அலுவலகத்தில் நடந்தது.
Advertisement

இந்த கூட்டத்துக்கு பின் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தென்மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம். வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. பீகாரில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து இறந்தவர்கள் வாக்குகளை நீக்கியுள்ளது. அதேபோல தமிழகத்திலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இருக்கை மாற்றி அமைப்பது தேவையில்லாதது. அதிமுக பொதுசெயலாளர் நடத்தும் எழுச்சி பயணத்திற்கும், மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கும் மிகப்பெரிய அளவில் மக்கள் வந்தனர். புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஜய் கட்சிக்கு நாங்கள் எந்த அழைப்பும் விடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விஜய்க்கு எதிராக புகார்- இந்து அமைப்பு தலைவர் பேட்டி

இந்து ராஷ்டிரா அமைப்பின் தலைவர் கருணாநிதி சுவாமிகள், மதுரை கலெக்டர் ப்ரவீண்குமாரை ேநற்று சந்தித்து மனு அளித்தார். அதில், ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவைப் போல விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்’’ என கூறியுள்ளார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சிபிஐ விசாரணை அமைப்பை பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கைக்கூலி போல செயல்படுவதாக நடிகர் விஜய் பேசியது கண்டிக்கத்தக்கது. அரசியல் மேடையில் விசாரணை அமைப்பு குறித்து அவதூறாக பேசுவது ஏற்கத்தக்கது அல்ல. இதுதொடர்பாக விரைவில் விஜய் மீது புகார் அளிக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்தும் முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

Advertisement

Related News