செங்கோட்டையனை இயக்கும் பாஜ: வேல்முருகன் பேட்டி
கன்னியாகுமரி: செங்கோட்டையனை பாஜக இயக்குகிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
Advertisement
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கன்னியாகுமரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
செங்கோட்டையனை பாஜக இயக்குகிறது. நான் மட்டும் சொல்லவில்லை, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் சொல்கிறார்கள். செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்தது பாஜக கண்டிப்பாக அரசியல் குறித்தான நகர்வுகளை செய்து கொண்டிருப்பது தெரிய வருகிறது. இன்றைக்கு நயினாரின் டெல்லி பயணமும் இதைதான் காட்டுகிறது. பாமக குறித்து நான் பேசுவதில்லை, அது அப்பா-மகனுக்கான பிரச்னை. இது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
Advertisement