பிட்ஸ்
* ஜஸ்டின் கிரீவ்ஸ் 202 நியூசி-வெ.இ டெஸ்ட் டிரா
கிறைஸ்ட் சர்ச்: நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 2ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 231 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் 145, ரவீந்திரா 176 ரன்கள் குவித்ததால், 8 விக்கெட் இழப்புக்கு 466 ரன்னுடன் டிக்ளேர் செய்யப்பட்டது. பின் 2ம் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 4ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று வெ.இண்டீசின் ஷாய் ஹோப் 140, ஜஸ்டின் கிரீவ்ஸ் அவுட்டாகாமல் 202 ரன் குவித்ததால், ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 457 ரன் சேர்ந்தது. அதனால் போட்டி டிராவில் முடிந்தது.
* சீமா பூனியாவுக்கு 16 மாத தடை
புதுடெல்லி: கடந்த 2014ல், ஆசிய விளையாட்டு போட்டிகளில் வட்டு எறிதலில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை சீமா பூனியா (42). சமீபத்தில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணை முடிவில, சீமா, ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதனால், 16 மாதங்கள் போட்டிகளில் ஆட சீமா பூனியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த வகை ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தினார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. சீமா பூனியா, அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.