பிட்ஸ்
⦁ உலக ஜூனியர் பேட்மின்டன் இந்தியா அபார வெற்றி
கவுகாத்தி: சுஹந்திநாதா கோப்பைக்கான பிடபிள்யுஎப் உலக ஜூனியர் பேட்மின்டன் கலப்பு அணி சாம்பியன்ஷிப் போட்டியில், எச் பிரிவில் நேபாளத்துடன் இந்திய அணி நேற்று மோதியது. இதில் சிறப்பாக ஆடிய இந்திய அணி, 45-18, 45-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடியது. எச் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதல் செட்டை, 30-45 என்ற புள்ளிக் கணக்கில் இலங்கை இழந்தபோதும், அடுத்த இரு செட்களையும் 45-34, 45-44 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தி போட்டியில் திரில் வெற்றி பெற்றது.
⦁ குகேஷின் ராஜாவை தூக்கியெறிந்த நகமுரா
நியூயார்க்: அமெரிக்காவில் நேற்று முன்தினம் நடந்த செக்மேட் செஸ் காட்சிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷை, அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து, சதுரங்கப் பலகையில் குகேஷின் பக்கம் இருந்த ராஜாவை கையிலெடுத்த நகமுரா, பார்வையாளர்கள் மத்தியில் வீசியெறிந்தார். அதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. கடும் விமர்சனத்துக்கு ஆளான நகமுரா, ‘ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில் தான் அப்படி செய்தேன். போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் சொன்னபடி நான் செய்தேன். மற்றபடி யாரையும் அவமதிக்கும் நோக்கில் நான் அவ்வாறு நடக்கவில்லை’ என்றார்.