இந்திய தர நிர்ணய அலுவலகத்தில் வேலை
பணி: யங் புரொபஷனல். 5 இடங்கள்.
சம்பளம்: ரூ.70,000. வயது: 35க்குள்.
தகுதி: அறிவியல்/ பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் மார்க்கெட்டிங் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி ஆகிய விவரங்கள் இ.மெயில் மூலம் தெரிவிக்கப்படும். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பிசினஸ் இண்டியன் ஸ்டாண்டர்டால் நடத்தப்பில் பிரக்டிக்கல் அசஸ்மென்ட் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னரே பணி வழங்கப்படும். வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் இ.மெயில் மூலம் தெரிவிக்கப்படும். எனவே சரியான இ.மெயில் முகவரியை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
www.services.bis.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:05.09.2025.