மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: அடுத்த வாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலம் நிர்ணயம் செய்த தீர்ப்பை தொடர்ந்து குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விக்கு அடுத்தவாரம் உச்சநீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு வழங்குகிறது. தமிழ்நாடு அரசு, தொடர்ந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வாங்கிய உச்சநீதிமன்றம் மூன்று மாதத்தில் ஆளுநர், குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஒன்றிய அரசு குடியரசுத் தலைவர் மூலம் உச்சநீதிமன்றத்தில் 14 கேள்விகளை எழுப்பியது. அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் கால நிர்ணயம் அவசியமானது.
ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் விரும்பும் வரை மசோதாக்களை கையில் வைத்திருக்க முடியாது. இது அரசியல் சாசன நடை முறைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது என்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் இதற்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தது. கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேடி விசாரணையை முடித்து உத்தரவு ஒத்திவைத்து. இந்த நிலையில், வரும் 23ஆம் தேதி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் ஓய்வு பெறுவதால் அடுத்த வாரம் உத்தரவை வெளியிட உச்சநீதிமன்றம் தயாராகி வருகிறது. இந்த வழக்கு முந்தைய தீர்ப்பை சீராய்வு செய்வதற்கானது அல்ல என்று உச்சநீதிமன்றம் விசாரணையின் போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.