இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் இந்தியா - அமெரிக்கா டிச.10ல் மீண்டும் பேச்சு
புதுடெல்லி: இந்தியா அமெரிக்க இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 10ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் வௌியாகி உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத ஏற்றுமதி வரியை இந்தியாவுக்கு விதித்துள்ளார். இதை குறைக்க இருநாடுகள் இடையே பல கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை மீண்டும் வரும் 10ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் வௌியாகி உள்ளன. 3 நாள்கள் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அமெரிக்க குழுவுக்கு அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரிக் ஸ்விட்சர் தலைமை தாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement
Advertisement