பிஜூஜனதாதளம் கட்சியின் மாஜி பெண் எம்பி பாஜவில் இணைந்தார்
12:11 AM Aug 02, 2024 IST
Share
புதுடெல்லி: ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன்பட்நாயக் தலைமையிலான பிஜூஜனதாதளம் கட்சியின் மாநிலங்களவை எம்பி மம்தா மொகந்தா தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். நேற்று அவர் டெல்லியில் உள்ள பா.ஜ தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தேசிய செயலாளர் அருண் சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.