பீகாரை சேர்ந்த நபர் ஒருவர் மதுபோதையில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!
09:52 AM Jul 20, 2025 IST
Share
சென்னை வடபழனியில், பீகாரை சேர்ந்த மதன்(38) என்பவர் மதுபோதையில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இரண்டு வருடங்களாகக் கட்டிட வேலை செய்து வரும் மதன் தற்போது வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தங்கி பணியாற்றி வந்தார்.