பீகார் தேர்தலில் மஹுவா தொகுதியில் லாலு மூத்த மகன் போட்டி: 21 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
பாட்னா: பீகார் தேர்தலில் மஹூவா தொகுதியில் லாலு மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்பு லாலுபிரசாத் யாதவ் தனது மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவை ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கினார். இதையடுத்து அவர் ஜனசக்தி ஜனதா தளம் (ஜேஜேடி) பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். பீகார் தேர்தலில் அவரது கட்சி சார்பில் நேற்று 21 இடங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேஜ் பிரதாப் யாதவ், வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement