பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கக் கோரி 2 லட்சம் பேர் மனுதாக்கல்: பெயர் சேர்க்க 30 ஆயிரம் பேர் மனு
புதுடெல்லி: பீகாரில் வரும் நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கக் கோரி தனிநபர்களிடம் இருந்து 1.98 லட்சம் மனுக்கள் வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் பெயர்களை சேர்க்கக் கோரி 30 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. இதுவரை அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் வரைவு பட்டியலில் பெயர் சேர்க்க 25 மனுக்களையும் பெயரை நீக்க 105 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர். மாநிலத்தில் 7.24 கோடி வாக்காளர்களில் 99.11 சதவீதம் பேர் தங்கள் ஆவணங்களை சரிபார்ப்புக்காக சமர்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement