பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் பீகார் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; தான் வகுத்துள்ள விதிகளையே தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டினார். சட்டவிரோத நடைமுறை கண்டுபிடிக்கப்பட்டால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் நடவடிக்கை முழுமையாக ரத்து செய்யப்படும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு, சரியாகவே தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக கருதுகிறோம். பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் சட்டவிரோத நடைமுறை கண்டறியப்பட்டால், அது ரத்து செய்யப்படும்.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்குழ் தீர்ப்பு நாடு முழுவதற்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளது.