பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது ஆணையம்
டெல்லி: பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. பீகாரில் தலைமை தேர்தல் ஆணையர் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில் இன்று அறிவிக்கப்படுகிறது. பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவ.22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பீகாரில் வாக்காளர் தீவிர திருத்தம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement