தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் கட்சியில் என்டிஏ கூட்டணி கட்சிகள் இணைகிறதா?

* தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி, குழப்பம் நீடிப்பதால் உச்சக்கட்ட பதற்றம்

Advertisement

பாட்னா: பீகாரில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் என்டிஏ கூட்டணி கட்சிகள், பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருவதால் உச்சக்கட்ட பதற்றம் நீடித்து வருகிறது. 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் வரும் நவம்பர் 22ம் தேதியுடன் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது. அதனால், வரும் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் என 2 கட்டமாக தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

14ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இங்கு, நிதிஷ்குமார் தலைமையிலான பாஜவை உள்ளடக்கிய என்டிஏ கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான காங்கிரசை உள்ளடக்கிய மகாபந்தன் கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும் என்டிஏ, மகாபந்தன் கூட்டணி இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்டிஏ கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜ, மதச்சார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.  இந்த 5 கட்சிகளில் 3 கட்சிகள் கடந்த முறையும் என்டிஏ கூட்டணியில் இருந்தன. இதில் பாஜ 110 தொகுதிகளில் போட்டியிட்டு 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளில் போட்டியிட்டு 43 இடங்களிலும், மதச்சார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 7 தொகுதிகளில் போட்டியிட்ட 4 இடங்களையும் வென்றிருந்தது.

எனவே இந்த 3 கட்சிகளும் கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.  குறிப்பாக, சிராக் பஸ்வான் தனக்கு 40 முதல் 45 சீட்கள் வரை வேண்டும் என் கூறி வருகிறார். கடந்த 2020 தேர்தலில் தனித்து போட்டியிட்ட சிராக் பஸ்வான் கட்சி, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற போதிலும், வாக்குகளை கணிசமாக பிரித்தது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்டது ஐக்கிய ஜனதா தள கட்சிதான். அக்கட்சி 115 இடங்களில் போட்டியிட்டு வெறும் 43ல் மட்டுமே வென்றது.

மேலும், 2024 மக்களவை தேர்தலில் மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு திரும்பிய சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது. இதனால் தங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால் 40 சீட்களை கட்டாயம் ஒதுக்க வேண்டுமென சிராக் பஸ்வான் ஒற்றை காலில் நிற்கிறார். ஆனால் இவ்வளவு சீட்களை தர பாஜவோ, ஐக்கிய ஜனதா தளமோ விரும்பவில்லை. இது ஒருபுறமிருக்க, மதச்சார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி, ‘எங்களுக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது.

அதனால் இந்த முறை 15 தொகுதிகள் வேண்டும்’ என்று கேட்டிருக்கிறது. இதற்கு பாஜ ஒப்பு கொள்ளவில்லை. அதாவது இக்கட்சியின் தலைவர் ஜிதன் ராம் மஞ்சியை ஒன்றிய அமைச்சராக வைத்திருக்கிறது. இதன் மூலம் சீட் பேரம் பேச கூடாது என்று கூறியிருந்தது. ஆனால் ஜிதன், “எனக்கு அமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம். எங்க கட்சிக்கு அங்கீகாரம் வேணும். அதனால் குறைந்தது 15 தொகுதிகள் வேண்டும்’ என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ஆனால் கடந்த முறை ஒதுக்கிய 7 தொகுதிகளே உங்களுக்கு அதிகம்தான்.

இன்னும் கூடுதலாக என்றால் அதிகபட்சமாக 10 வரை ஒதுக்க முடியும் என்று பாஜக கறாராக பேசி வருகிறது. இதனால் கடுப்பான ஜிதன், “நாங்க கேட்ட தொகுதியை கொடுத்தால் ஓகே. இல்லையெனில் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. வெளியில் இருந்து என்டிஏவுக்கு ஆதரவு அளிக்கிறோம்” என்று கூறியுள்ளார். இதனால் கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனால் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

மறுபுறம் மகாபந்தன் கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விக்காசீல் இன்சான், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளில் கடந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144ல் போட்டியிட்டு 75 இடங்களையும், காங்கிரஸ் 70ல் போட்டியிட்டு 19 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) 19ல் போட்டியிட்ட 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

குறைவான இடங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) வெற்றி பெற்றாலும், போட்டியிட்ட தொகுதிகளில் அதிக தொகுதிகளை வென்றது இக்கட்சிதான். அதாவது ராஷ்டிரிய ஜனதா தளம் - 52.08%, காங்கிரஸ் - 27.14% இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) - 63.16% என வெற்றியை பெற்றிருக்கிறது. எனவே இந்த முறை 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) கேட்க, கூட்டணி தலைமை மறுத்துள்ளது.

ஆனாலும் 30 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட மாட்டோம் என்று கூறியிருக்கிறது. அதையும் கூட்டணி தலைமை ஏற்கவில்லை. எனவே மகாபந்தன் கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இதற்கு தீர்வு காணப்பட்டால்தான் அடுத்தடுத்த பிரசார பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்த முடியும். இதனால் மாநிலத்தில் உச்சக்கட்ட பதற்றம் நீடித்து வருகிறது.

Advertisement