பீகார் தேர்தல் களத்தில் தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் பிரதமர்: ராஜீவ் காந்தி
சென்னை: பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற பிரதமர் மோடி பேச்சு திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடலிபுத்திரம் போய் இந்தியர்களாக ஒன்றிணைந்து இந்தியாவைக் காப்போம் என்கிறார்… ஆனால், வெறுப்புப் பேச்சால் வளர்ந்து, வெறுப்புணர்வைத் தூண்டி நாட்டின் பிரதம அமைச்சராக ஆகியிருக்கும் மோடி அவர்களோ ஐநாவில் தமிழைப் பேசுகிறேன்… உலகமெல்லாம் திருக்குறளை எடுத்துச் செல்கிறேன் என வெளிவேஷம் போட்டுவிட்டு… பீகார் தேர்தல் களத்தில் தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.
இது வெறுப்பின் உச்சம் அல்லாமல் வேறென்ன… இந்திய தேர்தல் ஆணையம். பிரதமர் மோடி அவர்களே… தங்களின் பத்தாண்டுகால ஆட்சியின் லட்சணம்தான் பீகார், உபி சகோதரர்கள் வேலை தேடி தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள்… தமிழ்நாடும் அந்தச் சகோதரர்களைத் தாய்வீடுபோல அடைக்களம் கொடுத்து வேலை தேடி வந்தாரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் வெறுப்பின் மூலம் இந்திய தேர்தல் களத்தில் வென்றிருக்கலாம்… ஆனால் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”என்ற தத்துவார்த்த அடிப்படையில் வாழும் தமிழர்கள் மனதை ஒருபோதும் வெல்ல முடியாது… அதை உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
