பீகார் தேர்தல் செலவுக்காக அமைச்சர்களிடம் தலா ரூ.300 கோடி கேட்கும் முதல்வர் சித்தராமையா: கர்நாடகா பாஜ தலைவர் குற்றச்சாட்டு
பெங்களூரு: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செலவுக்கு நிதி வழங்குவதற்காக மாநில அமைச்சர்களிடம் முதல்வர் சித்தராமையா தலா ரூ.300 கோடி கேட்பதாக பாஜ மூத்த தலைவர் ஸ்ரீராமுலு குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பேசிய ஸ்ரீராமுலு, கட்சி மேலிட தலைவர்களிடம் நன்மதிப்பை பெற்று முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொள்ள நினைக்கும் சித்தராமையா, அதற்காக பெரிய தொகையை பீகார் தேர்தல் செலவுக்கு கொடுக்க நினைக்கிறார்.
அதற்காக அமைச்சர்களிடம் தலா ரூ.300 கோடி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் முதல்வர் சித்தராமையா அமைச்சர்களை இரவு விருந்துக்கு அழைத்திருந்தார். காங்கிரஸ் கட்சி பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியில் இல்லை. அந்தவகையில், கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பதால், பெரிய தொகையை கட்சிக்கு கொடுத்து தனது பதவியை காப்பாற்ற சித்தராமையா துடிக்கிறார் என்று ஸ்ரீராமுலு தெரிவித்தார்.