தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை ஆராய உயர்மட்டக் குழு அமைக்க அரசுக்கு உத்தரவிடுக : உச்சநீதிமன்றத்தில் மனு!!

பாட்னா : பீகாரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பீகார் தொடர் பால விபத்துகள் அரங்கேறும் மாநிலமாக மாறி வருகிறது. கடந்த மார்ச் மாதம் சுபால் மாவட்டம் மரிச்சா பகுதி அருகே கோசி ஆற்றின் மீது 10.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.984 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.கடந்த ஜூன் 18ம் தேதி அராரியா மாவட்டம் பராரியா கிராமத்தில் பக்ரா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த புதிய பாலம் திறப்பு விழாவுக்கு சில தினங்களுக்கு முன் சரிந்து விழுந்தது. சிவான் மாவட்டத்தில் ராம்கர் ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 30 ஆண்டுகள் பழமையான பாலம் கடந்த 22ம் தேதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. அதற்கு அடுத்தநாளே(ஜூன 23) கிழக்கு பூர்வி சம்பாரன் மாவட்டம் மோதிஹாரியில் கால்வாய் மீது ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட சிறிய பாலம் முழுவதும் இடிந்து விழுந்தது.
Advertisement

ஜூன் 27ம் தேதி கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் ஒரு பாலமும், 29ம் தேதி மதுபானி மாவட்டம் மாதேபூர் பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த 75 மீட்டர் நீள பாலமும், கடைசியாக கடந்த 30ம் தேதி பதாரியா பஞ்சாயத்தின் கோஷி டாங்கி கிராமத்தில் தாக்கூர்கஞ்ச் பகுதியில் பாலம் இடிந்து விழுந்தது. இதனிடையே சிவான் மாவட்டம் தியோரியா தொகுதியில் பல கிராமங்களை இணைக்கும் விதமாக கண்டகி ஆற்றின் மீது ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒருபகுதி நேற்று சரிந்து விழுந்து விபத்து நேரிட்டது. இதுவரை பீகாரில் கடந்த 15 நாட்களில் நடந்த 9வது பால விபத்து இதுவாகும்.

இந்த நிலையில், பீகாரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பிரஜேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்," சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலங்கள் மட்டுமல்லாது, அண்மையில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2 வாரத்தில் 9 பாலங்கள் இடிந்துள்ளன. எனவே பீகாரில் உள்ள அனைத்து பாலங்களின் உறுதி தன்மையை சோதனை செய்ய உயர்மட்டக் குழு அமைக்க பீகார் மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். சோதனையில் கண்டுபிடிக்கப்படும் பலவீனமான பாலங்களை இடிக்கவும் உத்தரவிட வேண்டும். பொதுவாகவே பீகார் மாநிலம் வெள்ள பாதிப்பு மிகுந்த மாநிலம் என்பதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும், "இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement