பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் சீரழிந்துள்ளதாக ராகுல் காந்தி காட்டம்
Advertisement
பாட்னா: சமூக நீதியை விரும்பாத கட்சிதான் பாஜக என்று பீகாரின் முசாஃபர்பூரில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாஜக இயக்குகிறது. பீகார் மக்களின் குரலை ஒடுக்க பாஜக முயற்சிக்கிறது. எஸ்.ஐ.ஆர். மூலம் அரசியல் சாசனம் மூலம் பிரதமர் மோடி தாக்குதல் நடத்தி வருகிறார். பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்களை துணைவேந்தர்களாக நியமிக்கின்றனர். பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் சீரழிந்துள்ளது என்றும் விமர்சனம் செய்தார்.
Advertisement