பீகாரில் 243 தொகுதியிலும் ஆம் ஆத்மி போட்டி
பாட்னா: பீகார் சட்டபேரவை தேர்தலில் அனைத்து 243 தொகுதியிலும் போட்டியிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி அறிவித்துள்ளது. பீகார் மாநில ஆம் ஆத்மி பொறுப்பாளர் அஜேஷ் யாதவ் கூறுகையில்,‘‘ பீகார் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் ஆம் ஆத்மி 243 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தும். நாங்கள் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எந்த ஒரு கூட்டணியிலும் இடம் பெற மாட்டோம். டெல்லியில் ஆம் ஆத்மி செய்த பணிகள் நாடு முழுவதும் பேசப்படுகிறது. டெல்லியில் முந்தைய தேர்தல்களில் ஆம் ஆத்மியின் வெற்றிக்கு உபி, பீகார் மக்கள் காரணம். தற்போது பீகார் தேர்தலிலும் ஆம் ஆத்மியை மக்கள் ஆதரித்து வெற்றி பெற செய்வார்கள்’’ என்றார்.
Advertisement
Advertisement