பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் ஜூலை 10ல் விசாரணை
Advertisement
டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிக்கு எதிரான வழக்கு ஜூலை 10ல் விசாரணை நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் ஜூலை 10ம் தேதி விசாரிக்கிறது. பீகாரில் நடப்பாண்டு இறுதியில் நடக்கவுள்ள தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திரிணாமுல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 2003க்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தோர் இந்தியர்கள் என உறுதிப்படுத்த ஆவணங்களை தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement