தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

"பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட காரணம் என்ன?" - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !

டெல்லி : பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 69 லட்சம் பேரில் மீண்டும் சேர்க்கப்பட்டவர்கள் எத்தனை பேர், புதிய வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது, "இறுதி வாக்காளர்கள் பட்டியலில் சுமார் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் எதற்காக நீக்கப்பட்டார்கள் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்றும், சம்பந்தபட்ட நபர்களுக்கும் தெரிவிக்கவில்லை.வாக்காளர் பட்டியல் வெளிப்படையானதாக இல்லை; பல்வேறு குழப்பங்கள் நிறைந்ததாக உள்ளது.முதலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில் எத்தனை பேர் மீண்டும் சேர்க்கப்பட்டனர் என தெரிவிக்கவில்லை. 2003 தேர்தல் ஆணைய விதிமுறைகளை தேர்தல் ஆணையமே மீறி வருகிறது," என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "நீக்கப்பட்டவர்கள் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 69 லட்சம் பேரில் மீண்டும் சேர்க்கப்பட்டவர்கள் எத்தனை பேர், புதிய வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதை தெரிவிக்க வேண்டும், வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம்.தேர்தல் என்பது பொதுவான ஜனநாயக நடவடிக்கை, அதில் குழப்பம் எதுவும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்," இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement

Related News