பீகாரில் ராகுல் - தேஜஸ்வி நடைபயண யாத்திரை ஒத்திவைப்பு
04:40 PM Aug 05, 2025 IST
டெல்லி: பீகாரில் ராகுல் - தேஜஸ்வி இணைந்து ஆக.10ல் தொடங்க திட்டமிட்டிருந்த நடைபயண யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் வோட் அதிகார் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆர்.ஜே.டி. அறிவித்துள்ளது. நடைபயணத்துக்கான புதிய தேதி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும் என்றும் ஆர்.ஜே.டி. தகவல் தெரிவித்துள்ளது.