பீகாருக்கு 20 ஆண்டு என்.டி.ஏ. அரசு கூட்டணி செய்தது என்ன?- பிரியங்கா காந்தி
பாட்னா: கடந்த 20 ஆண்டுகளாக பீகாரில் ஆட்சியில் இருந்த என்.டி.ஏ. கூட்டணி மக்களுக்காக செய்தது என்ன என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் ஓய்வடையுள்ள நிலையில், ஆர்.ஜே.டி. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சோன்பர்சாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி பீகார் தேர்தலுக்கான சலுகைகள் அறிவிப்பதற்கு முன் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் ஆகியோர் கடந்த 20 ஆண்டுகளில் பீகார் மாநிலத்திற்கு என்.டி.ஏ. கூட்டணி என்ன செய்து என்பது குறித்து முதலில் கூறவேண்டும் என்றார்.
வேலையின்மை பெருகி வருவதாலும், வேலைவாய்ப்பு உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பா.ஜ.கவின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்கப்படுவதாலும், பீகாரின் இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். பீகாரை அவமதித்ததாக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் குற்றம் சாட்டும் பிரதமர் மோடி, புதிதாக அவமதிப்பு அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார். பீகார் அரசை நடத்துவது பா.ஜ.க தான் என்றும் நிதீஷ் குமார் இல்லை என்றும் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்