பீகாரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் முடிவு செய்துவிட்டனர்: தேஜஸ்வி யாதவ்!
பாட்னா: பீகாரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் முடிவு செய்து விட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ், பாஜக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட அனைத்து அரசு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ். பீகாரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் முடிவு செய்துவிட்டதாக தெரிவித்தார். நிதிஷ்குமார் ஆட்சியில் ஊழலும், குற்றச்செயல்களை தலைவிரித்து ஆடுவதாகவும். வேலையின்மை அதிகரித்து இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
பீகாரில் செயலிழந்துவிட்ட டபுள் இன்ஜின் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய தேஜஸ்வி யாதவ் பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பெண்கள் மேம்பாட்டிற்கான ஜீவிகா சுய உதவி குழு திட்டத்தில் பணியாற்றும் அனைத்து பெண்களும் ரூ.30ஆயிரம் ஊதியத்துடன் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் வங்கிகளில் அவர்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இவர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.