பீகாரில் முதல்கட்ட தேர்தல் : காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குபதிவு
பீகார்: பீகாரில் முதல்கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரில் முதற்கட்டமாக 121 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பீகார் தேர்தலில் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். சஹார்சா தொகுதியில் அதிகபட்சமாக 15.27% வாக்குகள் பதிவு. லக்கிசரா தொகுதியில் குறைந்தபட்சமாக 7% வாக்குகள் பதிவாகியது.
Advertisement
Advertisement