பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லி: பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதி அளித்தது. நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீக்கப்பட்ட வாக்காளர், பட்டியலை சரிபார்க்கும் வகையில் வெளியிடவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.