10வது முறையாக பீகார் மாநிலத்தின் முதல்வராக நாளை பதவியேற்கிறார் நிதிஷ் குமார்..!!
பீகார்: 10வது முறையாக பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ் குமார் நாளை பதவியேற்கிறார். என்டிஏ சட்டமன்ற குழு தலைவராகவும் நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றது தேசிய ஜனநாயகக் கூட்டணி. நிதிஷ் உடல்நிலை குறித்து சர்ச்சை நிலவும் நிலையில் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 2005ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக பீகார் ஆட்சி நிதிஷ் குமாரின் கையில் உள்ளது.
Advertisement
Advertisement