பீகார் வாக்காளர் பட்டியல் வழக்கு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் வழக்கு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது. பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும், வாக்காளர்கள் எதற்காக நீக்கப்பட்டார்கள் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாக்காளர்கள் எதற்காக நீக்கப்பட்டனர் என்பதற்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement