பீகார் சட்டமன்ற தேர்தல் எதிரொலி; ஆக.1ம் தேதி முதல் 125 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
Advertisement
இதுகுறித்து முதல்வர் நிதிஷ்குமார் தனது எக்ஸ் தள பதிவில்,
‘பீகார் மக்களுக்கு ஏற்கனவே குறைந்த விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வரும். ஜூலை மாத கட்டணத்தில் 125 யூனிட் வரை பயன்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இதனால், மொத்தம் 1 கோடியே 67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement