பீகாரில் பகல் 1 மணி நிலவரப்படி 40% வாக்குகள் பதிவு
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலின் 121 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள், ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். பக்தியார்பூரில் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும், பாட்னாவில் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.
காலை 9 மணி நிலவரப்படி 13.13% வாக்குகள் பதிவான நிலையில், 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 30.37% வாக்குகள் பதிவாகி உளளன. தலைநகர் பாட்னாவில் 23.71% வாக்குகள் பதிவாகி உள்ளன. லக்கிசராய் மாவட்டத்தில் 30.32% வாக்குகளும், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் 30.04% வாக்குகளும் பதிவாகி உள்ளன. பக்ஸர் மாவட்டத்தில் 28.02%, போஜ்பூர் மாவட்டத்தில் 26.76%, தர்பங்காவில் 26.07%, காகாரியாவில் 28.96%, மாதேபுராவில் 28.46%, முங்கெரில் 29.68%, முசாபர்பூரில் 29.66%, நாளந்தாவில் 26.86%, சஹார்சாவில் 29.68%, சமஸ்திபூரில் 27.92%, சரணில் 28.52%, ஷேக்புராவில் 26.04%, சிவானில் 27.09%, வைஷாலியில் 28.67% வாக்குகள் பதிவாகி உள்ளன. பகல் 1 மணி நிலவரப்படி 40 சதவீத வாக்குகள் பதிவாகின.