பவானிசாகர்,ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு, இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணை..!!
சென்னை: பவானிசாகர், ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு, இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கோயம்புத்தூர் மாவட்டம். ஆனைமலை வட்டம். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு, இரண்டாம் போக பாசனத்திற்காக, 24.10.2025 முதல் 15.04.2026 முடிய, ஆழியாறு அணையிலிருந்து தொடர்ந்து 173 நாட்களுக்கு 1143 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டம். ஆனைமலை வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். 2025-2026-ஆம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு 24.10.2025 முதல் 20.02.2026 வரை 120 நாட்களுக்கு, 9849.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி ஆகிய வட்டங்களிலுள்ள 24504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.