பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 இடங்கள்
பாட வாரியாக காலியிடங்கள் விவரம் வருமாறு
1. புரொபேஷனரி இன்ஜினியர் (எலக்ட்ரானிக்ஸ்) : 175 இடங்கள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன்/கம்யூனிகேசன்/டெலி கம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி.,
2. புரொபேஷனரி இன்ஜினியர் (மெக்கானிக்கல்): 109 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி.,
3. புரொபேஷனரி இன்ஜினியர் (கம்ப்யூட்டர் சயின்ஸ்): 42 இடங்கள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி
4. புரொபேஷனரி இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்): 14 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/பிஎஸ்சி.,
சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000.
வயது: 01.10.2025 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, ேசலம் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: ரூ.1000/-. இதை ஸ்டேட் வங்கி மூலமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www. bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.