கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: பகவந்த் மான்
சென்னை: காலை உணவு விரிவாக திட்டத்தின் தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருப்பது மிகவும் பொறுமையாக உள்ளது. என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்க விழாவில் கலந்து கொள்வதற்காக, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் இன்று தமிழகம் வந்துள்ளார்.
சண்டிகரில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான் ; கல்வி சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு இந்தியவில்லையா தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பஞ்சாப்பில் தற்போது மதிய உணவுத் திட்டம் உள்ளது. காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம். காலை உணவு திட்டத்தின் விரிவாக்க விழாவுக்கு முதல்வர் என்னை அழைத்ததை பெருமையாக கருதுகிறேன்.
நாம் அனைவரும் ஒரே நாடு. தமிழர்கள், பஞ்சாப்பியர்கள் எண்ண ஒட்டம் ஒரே மாதிரியாக உள்ளது. என் மீதும், அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் தமிழ்நாடு முதலமைச்சர் மிகுந்த அன்பு வைத்துள்ளார்.பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் விழாக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரை அழைப்போம் எனவும் கூறினார்.