தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடுவாஞ்சேரி அருகே குளிர்பான கடை ஷட்டரை திறந்து நகைக்கடை சுவரில் துளையிட்டு 92 சவரன் நகைகள் கொள்ளை: 4 சிசிடிவி கேமராக்கள் உடைப்பு, மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

சென்னை: கூடுவாஞ்சேரி அருகே பாண்டூரில் குளிர்பான கடையின் ஷட்டரை திறந்து உள்ளே புகுந்த ஆசாமிகள், நகை கடை சுவரில் துளையிட்டு அங்கிருந்த 92 சவரன் நகை, 4 கிலோ வெள்ளி மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்துவிட்டு சென்றுள்ளனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தங்கப்பாபுரம், வஉசி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (54).
Advertisement

இவர் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பாண்டூரில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகிலேயே பாண்டூரை சேர்ந்த பூபதி (50) என்பவர் குளிர்பான கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதி மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் கடையின் பின்பக்கம் வழியாக இருந்த ஷட்டரை திறந்து உள்ளே புகுந்து குளிர்பான கடையிலிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.

பின்னர் அந்த கடையின் சுவரின் வழியாக துளை போட்டு நகைக் கடையில் புகுந்து நகைக் கடையில் இருந்த சுமார் 92 சவரன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளையர்களின் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கடை முன்பு இருந்த 4 சிசிடிவி கேமராக்களை உடைத்து மழைநீரில் தூக்கி வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் வந்த கடை உரிமையாளர்கள் கடைகளை திறந்து பார்த்தனர்.

அப்போது நகை மற்றும் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனே கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர். போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வர வைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement