தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் எஸ்டிபிஐ சார்பில் 10 பேருக்கு விருது: சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது

 

Advertisement

சென்னை: எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாநில துணை தலைவர் அச.உமர் பாரூக் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகளை வழங்கி கவுரவித்தார். காயிதே மில்ல விருதை முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே.நிஜாமுதீன், அம்பேத்கர் விருது-வழக்கறிஞர் கு.பாரதி, காமராசர் விருது-ஆரிபா கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் சுல்தானுல் ஆரிபின், அன்னை தெரசா விருது- முன்னாள் எம்பி டாக்டர் பொன்.கௌதம சிகாமணி, டாக்டர் அபுல் கலாம் ஆசாத் விருது- முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் அமைப்பு தலைவர் -முஹம்மது அஷ்ரப், சயீத் சாஹிப் விருது- தர்மபுரி எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அம்ஜத் பாஷா, பழனிபாபா விருது-முன்னாள் எம்எல்ஏ உ.தனியரசு, வள்ளல் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் விருது- பரீதா குழுமத் தலைவர் டாக்டர் அபுல் கலாம், கவி கா.மு.ஷெரீப் விருது- நெல்லை எழுத்தாளர் எம்.எம்.தீன் ஆகியோர் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஜெகத் கஸ்பர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சென்னை மாவட்ட தலைவர்கள் இஸ்மாயில், செய்யது அஹமது, பூட்டோ மைதீன், சீனி முகமது, அப்துல் ரசாக், முகமது பிலால், செங்கல்பட்டு மாவட்ட தலைவர்கள் மாலிக், ஜூபைர் அலி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் சாதிக், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரீப், தொண்டர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News