பெங்களூரு டிராஃபிக் ஜாம் மட்டுமே சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது: டி.கே.சிவக்குமார் ஆதங்கம்
பெங்களூரு: பெங்களூரு டிராஃபிக் ஜாம் மட்டுமே சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆதங்கம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் பல்வேறு ஐடி நிறுவனங்களும், கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் ஐபிஎம் போன்ற சர்வதேச தலைமையகமாக பெங்களூரு உள்ளது. இங்கு நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஒரு கடுமையான பிரச்சனையாக உள்ளது, பணியாளர்கள் அலுவலகத்திற்கு செல்ல தினசரி 3 மணி நேரமாகிறது என தெரிவித்து வருகின்றனர். இது பயணிகளை பாதிக்கிறது என சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்த செய்திகள் மற்றும் உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன. இந்த நிலையில், பெங்களூரு அரசியல் நடவடிக்கைக் குழு நிகழ்வில் பேசிய துணை முதலமைச்சரும் பெங்களூரு மேம்பாட்டு அமைச்சருமான டி.கே. சிவகுமார், கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் (GBA) கீழ் நகரத்தின் எதிர்காலத்திற்கான சவால்கள் மற்றும் திட்டமிடல் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 1.27 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் மற்றும் விரைவான மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்டது பெங்களூரு.
போக்குவரத்து, கழிவு மேலாண்மை மற்றும் நீர் விநியோகத்தில் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கிறது. பெங்களூரு ஒரு திட்டமிடப்பட்ட நகரம் அல்ல. மாணவர்களும் இளைஞர்களும் கல்வி மற்றும் வேலைகளைத் தேடி இங்கு செல்கின்றனர். இதனால் கட்டுக்கடங்காத போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய அரசு முயற்சிகளை எடுத்த வருகிறது. லண்டன் டிராஃபிக் ஜாமால் மக்கள் 3 மணி நேரம் காத்திருக்கின்றனர். டெல்லி விமான நிலையத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்ல 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் பெங்களூரு டிராஃபிக் மட்டுமே சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படுகிறது என அவர் தெரிவித்தார்.